AustraliaCommunity

குடும்ப வன்முறைகளுக்கு முடிவுகட்ட பிரதமர் அழைப்பு

ஆஸ்திரேலியாவில் குடும்ப வன்முறைச் சம்பவங்கள் தலைவிரித்தாடும் நிலையில், அவற்றை முடிவுக்கு கொண்டுவருவதற்கு காத்திரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று பிரதமர் Anthony Albanese உறுதியளித்துள்ளார்.

அனைவரும் ஒன்றிணைந்து இந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

குடும்ப வன்முறைகளைத் தடுப்பதற்கு கடந்த காலங்களில் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும், சம்பவங்கள் தொடரவே செய்கின்றன. எனவே, இது விடயத்தில் மேலதிக நடவடிக்கைகள் அவசியம் என்பது உணரப்பட்டுள்ளது எனவும் விசேட அறிக்கையொன்றின் ஊடாக பிரதமர் Anthony Albanese சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Back to top button