AustraliaCommunityWorld

ஆஸ்திரேலியா முடக்கியுள்ள ரஷ்ய நிதியை கோருகிறது உக்ரைன்!

ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் முற்றாக சேதமடைந்துள்ள குழந்தைகள் வைத்தியசாலையை மீPளக் கட்டியெழுப்புவதற்கு ரஷ்யாவின் முடக்கப்பட்ட நிதியை ஆஸ்திரேலியா பயன்படுத்த வேண்டும் என்று உக்ரைன் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கான உக்ரைன் தூதுவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

உக்ரைன்மீது ரஷ்யா நேற்று முன்தினம் கொடூர தாக்குதலை நடத்தியது. குழந்தைகள் வைத்தியசாலை உட்பட பல இடங்களில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் குறைந்தபட்சம் 36 பேர் பலியாகியுள்ளனர்.

இதனையடுத்து உக்ரைனில் ஒருநாள் துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது.
இது மிகவும் கொடூரமான தாக்குதல் என்று ஆஸ்திரேலியாவுக்கான உக்ரைன் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, மேற்படி தாக்குதலை ஆஸ்திரேலியாவும் வன்மையாகக் கண்டித்துள்ளது.

உக்ரைன்மீது ரஷ்யா போர் தொடுத்ததையடுத்து அந்நாடுமீது ஆஸ்திரேலியா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. சில நிறுவனங்களின் சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button