AustraliaCommunity

ஆஸ்திரேலியர்கள் மத்தியில் கஞ்சாமீதான காதல் அதிகரிப்பு

ஆஸ்திரேலியர்கள் மத்தியில் கஞ்சாமீதான காதல் அதிகரிப்பு

ஆஸ்திரேலியாவில் Methamphetamine, Cocaine மற்றும் கஞ்சா ஆகிய சட்டவிரோத போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், சட்டவிரோத போதைப்பொருள் பாவனையில் கஞ்சா தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகின்றது.

ஆஸ்திரேலிய குற்றவியல் புலனாய்வு ஆணைக்குழுவால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டவிரோத போதைப்பொருள் அதிகம் பயன்படுத்தப்படும் 34 நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா 4 ஆவது இடத்தில் உள்ளது.

ஆஸ்திரேலியர்கள் கஞ்சாவையே அதிகம் பயன்படுத்துகின்றனர். அதிகளவு கஞ்சா நுகரப்படும் 20 நாடுகளில் ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

Cocaine போதைப்பொருள் பாவனையில் 32 நாடுகளில் ஆஸ்திரேலியா 20 ஆவது இடத்தில் உள்ளது.

குயின்ஸ்லாந்து, தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா ஆகிய மாநிலங்களிலேயே Methamphetamine அதிகம் நுகரப்படுகின்றது.

Related Articles

Back to top button