ஆல்பிரட் வெப்பமண்டல சூறாவளி தாக்கத்தையடுத்து விடுக்கப்பட்டிருந்த அவசரகால எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளது என்று குயின்ஸ்லாந்து மாநில பிரீமியர் இன்று தெரிவித்தார்.
அடை மழை மற்றும் வெள்ள அபாயம் குறைந்துவருகின்றது எனவும் அவர் கூறினார்.
சீரற்ற காலநிலையால் சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கின. தற்போது மின் கட்டமைப்பை சீர்செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வந்தாலும் சுமார் ஒரு லட்சத்து 18 ஆயிரம் வீடுகள் தொடர்ந்து இருளில் மூழ்கியுள்ளன.
இந்நிலையில் மின் இணைப்பை மீள வழங்குவதற்குரிய பணிகளில் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
அதேவேளை, வடக்கு நியூ சவூத் வேல்ஸிலும் சீரற்ற காலநிலை தாக்கம் குறைவடைந்துள்ளது. வெளியேற்றல் மையங்களில் தங்கி இருந்தவர்களை மீள வீடுகளுக்கு அனுப்பும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.