ஆஸ்திரேலியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினியம்மீதான ட்ரம்ப் நிர்வாகத்தின் வரி விதிப்பு முற்றிலும் நியாயமற்றது என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு ட்ரம்ப் பல மாற்றங்களை ஏற்படுத்திவருகின்றார். பல நாடுகள்மீது அவர் வர்த்தகப்போரை தொடுத்துள்ளார்.
எனினும், நட்பு நாடான ஆஸ்திரேலியாவுக்கு அவர் வரி விலக்களிப்பார் என லேபர் அரசு முழுமையாக நம்பியது.
ஆனால் எஃகு மற்றும் அலுமினியம்மீதான வரி இன்று முதல் அமுலாகும் என ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையிலேயே இது தொடர்பில் ஆஸ்திரேலிய பிரதமர் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார். குறித்த வரி விதிப்பானது இரு நாடுகளின் நீடித்த நட்பின் உணர்விற்கு எதிரானது எனவும், பொருளாதார கூட்டாண்மைக்கு முரணானது எனவும் அல்பானீஸ் விமர்சித்துள்ளார்.