அமெரிக்காவிடமிருந்து வரி விலக்கை பெற்றுக்கொள்ளும் விடயத்தில் லேபர் அரசு தோல்வி கண்டுள்ளது என லிபரல் கூட்டணி விமர்சித்துள்ளது.
அத்துடன், பிரதமர் அந்தோனி அல்பானீஸின் பலவீனமான தலைமைத்துவத்துக்கு இது மற்றுமொரு சான்றெனவும் முத்திரை குத்தியுள்ளது.
அலுமினியம் மற்றும் எஃகுமீதான 25 சதவீத வரியிலிருந்து விலக்களிக்குமாறு லேபர் அரசு விடுத்த கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ள நிலையிலேயே, ஆளுங்கட்சிமீது எதிரணி விமர்சனக் கணைகளை இவ்வாறு தொடுத்துள்ளது.
' இது ஆஸ்திரேலியாவிற்கு ஒரு மோசமான நாள், லேபர் அரசின் தோல்வியை தெளிவாக வெளிப்படுத்துகின்றது." என்று எதிர்க்கட்சி தலைவர் பீட்டர் டட்டன் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்காவுடன் பேச்சு நடத்தி தீர்வை பெறமுடியாத நிலையிலேயே பிரதமர் உள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.