ஆஸ்திரேலியாவில் இஸ்லாமிய வெறுப்பு மற்றும் தாக்குதல் சம்பவங்கள் இரட்டிப்பாக அதிகரித்துள்ளன. இது நெருக்கடி நிலைமையை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வறிக்கையொன்று கண்டறிந்துள்ளது.
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே இஸ்லாமிய வெறுப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்று மோனாஷ் மற்றும் டீக்கின் பல்கலைக்கழகங்களின் ஆய்வாளர்களால் தொகுக்கப்பட்ட ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்த ஆய்வுக்காக 18 ஆயிரம் சமூகவலைத்தள பதிவுகளும் ஆராயப்பட்டுள்ளன.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கிடையில் போர் மூண்டநிலையில், பாலஸ்தீன சார்பு உணர்வை வெளிப்படுத்தியவர்களும் குறிவைக்கப்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.
இஸ்லாமிய வெறுப்புகளில் 60 சதவீதமானவை வாய்மொழி மிரட்டல் மற்றும் துன்புறுத்தலென மேற்படி ஆய்வாளர்களால் வகைப்படுத்தப்பட்டுள்ளது.