ஆஸ்திரேலியாவுடன் 2022 ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தம் மீளாய்வு செய்யப்படும் என்று பசுபிக் தீவு நாடான வனுவாட்டுவின் புதிய பிரதமர் அறிவித்துள்ளார்.
மேற்படி ஒப்பந்தம் தமது நாட்டுக்கான முன்னுரிமைகளைப் பிரதிபளிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காலநிலை மாற்றம் தொடர்பான உள்ளடக்கம் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இல்லாமை பிரச்சினையாகும் எனவும், இது தொடர்பில் ஆஸ்திரேலியாவுடன் பகிரங்க கலந்துரையாடலுக்கு தயார் எனவும் வனுவாட்டுவின் புதிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
வனுவாட்டு தீவில் காலூன்றுவதற்கு சீனா முயற்சித்துவருகின்றது. இதனை தடுப்பதற்கு ஆஸ்திரேலியா பல வியூகங்களை வகுத்துவருகின்றது. இதன்ஓர் அங்கமாகவே பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.