இந்தோனேசிய பாலியில் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை மாலை சுமார் 8.30 மணியளவில் டென்பசார் அருகே பிரபலமான மற்றும் அழகிய தீவான பெனிடா தீவுக்கு 11 ஆஸ்திரேலியர்கள் உட்பட 13 பேருடன் சென்று கொண்டிருந்த சீ டிராகன் படகு படகு கவிழ்ந்தது.
இத் துயர சம்பவத்தில் கான்பெராவைச் சேர்ந்த அன்னா மாரி (39)பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 39 வயது ஆஸ்திரேலிய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்றும் பிரிஸ்பேனைச் சேர்ந்த 29 வயதான கேப்ரியல் ஹிஜ்னியாகோஃப் (29) மற்றும் பாலியில் வசிக்கும் ஆஸ்திரேலிய நாட்டவரான 32 வயதான சின்டாமணி வாரிங்டன் ஆகியோர் இந்த சம்பவத்தில் காயமடைந்ததனர்.
திருமதி மாரி மீட்கப்பட்டு தீக்காயங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
280 மில்லியன் மக்கள்தொகை கொண்ட இந்தோனேஷியா 17,000 க்கும் மேற்பட்ட தீவுகளை உள்ளடக்கியது, இதில் பயணிக்கும் சுற்றுலாப் படகுகள் ஒரு பிரபலமான அதே சமயம் ஒப்பீட்டளவில் மலிவான போக்குவரத்து என்பது குறிப்பிடத் தக்கது.
சபா.தயாபரன்