சிட்னி கிழக்கு புறநகர் பகுதியில் ஷாப்பிங் சென்டருக்கு வெளியிலுள்ள பஸ் தரிப்பிடத்தில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர்.
மாரூப்ரா, பன்னெராங் வீதியிலுள்ள பஸ் தரிப்பிடத்திலேயே இன்று முற்பகல் 11.40 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலில் ஆணொருவரும், பெண்ணும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் 41 வயது பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.