ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைப்பதவியை புதியவர் ஒருவரிடம் ஒப்படைப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தேசித்துள்ளார் என அவருக்கு நெருக்கமானவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
பொலன்னறுவை மாவட்டத்தை மட்டும் அடிப்படையாகக்கொண்டு தனது இறுதிகால அரசியல் பயணத்தை முன்னெடுப்பதற்கு விரும்புவதாலும், புதியவர் ஒருவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற நோக்கிலுமே மைத்திரிபால சிறிசேன இந்த முடிவை எடுத்துள்ளார் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அடுத்த மாநாடு 2021 செப்டம்பர் 2ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன்போதே மேற்படி மாற்றம்வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. தலைமைப்பதவியை விட்டுக்கொடுத்தாலும் கட்சியின் ஆலோசகராக மைத்திரி தொடர்ந்தும் செயற்படுவார் எனவும் தெரியவருகின்றது.
அதுமட்டுமல்ல தனது மகன் மற்றும் மகள் ஆகியோரையும் சுதந்திரக்கட்சியில் இணைந்து அவர்களில் ஒருவருக்கு முக்கிய பதவியை பெற்றுக்கொடுப்பதற்கும் மைத்திரிபால சிறிசேன உத்தேசித்துள்ளார்