others

சீன பிரதமர் அடுத்தவாரம் ஆஸி. வருகை!

சீன பிரதமர் லி கியாங், அடுத்தவாரம் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். அவரின் வருகையை ஆஸ்திரேலிய பிரதமர் இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.

சீன பிரதமர் தமது விஜயத்தின்போது ஆஸ்திரேலிய பிரதமர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் முதலீட்டாளர்களுடன் சந்திப்புகளை நடத்தவுள்ளார்.

பீஜிங்கிற்கும், கன்பராவுக்கும் இடையிலான உறவு மேம்பட்டுவரும் சூழ்நிலையிலேயே சீன பிரதமரின் விஜயம் அமைந்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் வைன் ஏற்றுமதிக்கு விதித்திருந்த தடையை சீனா தளர்த்தியுள்ள நிலையில், அண்மையில் மாட்டிறைச்சி மீதான ஏற்றுமதி தடையும் நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Back to top button