others

சிட்னியிலுள்ள அமெரிக்க தூதரகம்மீது தாக்குதல்: பிரதமர் கண்டனம்

சிட்னியில் உள்ள அமெரிக்க தூதரகம்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பத்தை ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese வன்மையாகக் கண்டித்துள்ளார்.

மேற்படி தாக்குதலை நடத்திய மர்ம நபர், பாலஸ்தீன ஆதரவாளராக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில் போராட்டக்காரர்கள் வன்முறையைக் கையாளக்கூடாது எனவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

“ மத்திய கிழக்கு என்பது மிகவும் சிக்கலான விவகாரம் என சுட்டிக்காட்டியுள்ள பிரதமர், வெறுமனே கோசமிடுவதால் பிரச்சினை தீரப்போவதில்லை.” – எனவும் Anthony Albanese சுட்டிக்காட்டியுள்ளார்.

முகத்தை மறைத்த மர்ம நபரொருவர் துணை தூதரகத்தின் ஜன்னல்களை சேதப்படுத்துவதை பாதுகாப்பு கமராக்கள் காண்பித்துள்ளன.
9 ஜன்னல்கள்வரை நொறுக்கப்பட்டுள்ளன.

பெடரல் பொலிஸாரும், நியூ சவூத் வேல்ஸ் பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

Related Articles

Back to top button