others

பொலிஸ், காணி அதிகாரம் குறித்து சஜித்தின் நிலைப்பாடு என்ன?

வாக்குவேட்டை நடத்துவதற்காகவே அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் உறுதிமொழி வழங்கியுள்ளார். அவர் கிளிநொச்சியில் வைத்து கூறிய அதேவிடயத்தை தெற்கில் வைத்தும் கூற வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சவால் விடுத்துள்ளது.

அதேபோல பொலிஸ், காணி அதிகாரங்கள் உட்பட 13 ஆவது திருத்தச்சட்டம் எவ்வாறு அமுல்படுத்தப்படும் என்பது பற்றியும் அவர் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடக சந்திப்பு அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

இதன்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மொட்டு கட்சியின் தேசிய ஏற்பாட்டாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரோஹித அபேகுணவர்தன கூறியவை வருமாறு,

“அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் அமுல்படுத்தப்படும் என சஜித் கூறுகின்றார். 13 ஐ புதிதாக கொண்டுவர வேண்டியதில்லை. ரணசிங்க பிரேமதாச பிரதமராக இருந்தபோதுதான் 13 ஆவது திருத்தச்சட்டம் முன்வைக்கப்பட்டது. அதைத்தான் அமுல்படுத்தபோவதாக சஜித் இப்போது கூறுகின்றனார்.
மாகாணசபை முறைமையில் நல்ல விடயங்களும் உள்ளன. தீய விடயங்களும் உள்ளன. அதிகாரப்பகிர்வு இடம்பெற வேண்டும். எனினும், சிலர் அந்த அதிகாரப்பகிர்வை தவறாக பயன்படுத்தக்கூடிய சூழலும் காணப்படுகின்றது.

13 ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை எவ்வாறு அமுல்படுத்துவது என்பது பற்றி எதிர்க்கட்சி தலைவர் தெளிவுபடுத்த வேண்டும். நாட்டில் ஸ்ரீலங்கா பொலிஸ்தான் உள்ளது. மாகாணங்களுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர்கள் உள்ளனர்.

சஜித் ஆட்சிக்குவந்தால் வடக்கு, கிழக்குக்கு தனித்தனி பொலிஸ் செயற்படக்கூடும். இந்நாட்டில் 30 வருடகால போர் நடைபெற்றது என்பதை மறந்துவிடக்கூடாது. பாதுகாத்த நாட்டை மீண்டும் பிரிக்கவா முயற்சி எடுக்கப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து வாக்கு வேட்டை நடத்துவதற்காகவே எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு அறிவிப்பு விடுத்துள்ளார். 13 இல் உள்ள அதிகாரங்களை எவ்வாறு வழங்குவது என்பது பற்றி நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். கிளிநொச்சியில் கூறும் அதேNவிடயத்தை தெற்கிலும் கூற வேண்டும்.” – என்றார்.

Related Articles

Back to top button