others

ஐ.நா. பாதுகாப்பு சபை தீர்மானத்துக்கு ஹமாஸ் இணக்கம்: ஆஸி. வரவேற்பு

காசாவில் போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கும் ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானம் சிறந்த முன்னேற்றகரமான நடவடிக்கை என ஆஸ்திரேலியா பாராட்டியுள்ளது.

அத்துடன், குறித்த போர் நிறுத்த தீர்மானத்தை ஆஸ்திரேலியா முழுமையாக வரவேற்கின்றது என்று பிரதமர் Anthony Albanese தெரிவித்தார்.

ஹமாஸின் பிடியில் உள்ள பணயக் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் எனவும், மோதலுக்கு நிரந்தரமாக முற்றுபுள்ளி வைக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காசாவில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுவது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் Anthony Albanese யோசனை முன்வைத்துள்ளார்.

ஐ.நா. பாதுகாப்பு சபையின் போர் நிறுத்த யோசனைக்கு ஹமாஸ் அமைப்பும் இணக்கம் தெரிவித்துள்ளது.

 

Related Articles

Back to top button