others

காசாவில் பஞ்சம்போக்க 10 மில்லியன் டொலர்களை வழங்குகிறது ஆஸ்திரேலியா

காசாவில் வேலையில்லா திண்டாட்டமும், பஞ்சமும் தலைவிரித்தாடும் நிலையில், மனிதாபிமான உதவிகளுக்காக மேலும் 10 மில்லியன் டொலர்களை காசாவுக்கு வழங்குவதற்கு ஆஸ்திரேலியா முன்வந்துள்ளது.

காசா பகுதியில் மனிதாபிமான உதவிகளை முன்னெடுத்துவரும் உலக உணவு திட்டத்துக்கு இந்நிதி வழங்கப்படவுள்ளது.

பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு இதன்மூலம் நிவாரணம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சர்வதேச நீதிமன்ற உத்தரவின் பிரகாரம், உதவித்திட்டங்களை முன்னெடுப்பதற்குரிய வாய்ப்பை இஸ்ரேல் வழங்க வேண்டும் என்று அமைச்சர் Anne Aly  வலியுறுத்தினார்.

ஹமாலுக்கு எதிரான போர் என்ற போர்வையில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 36 ஆயிரத்துக்கு மேற்பட்ட பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button