others

சீனா, ஆஸ்திரேலியாவுக்கிடையில் இராணுவ மோதல் வெடிக்குமென அச்சம்!

சீன விவகாரத்தில் லேபர் கட்சி கடைபிடிக்கும் கொள்கையானது அடுத்த கூட்டாட்சி தேர்தலின்போது எதிரொலிக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆஸ்திரேலிய கூட்டாட்சி நாடாளுமன்ற தேர்தல் அடுத்த வருடம் நடைபெறவுள்ளது.

இத்தேர்தலின்போது ஆஸ்திரேலிய வாக்காளர்கள் தமது வாக்கை செலுத்துவதற்காக பல விடயங்களை கருத்திற்கொள்வார்கள் எனவும், இதில் ஒன்று சீனா தொடர்பான கட்சிகளின் கொள்கையாகும் எனவும் அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சீனாவின் உயர் மட்ட அரசியல் தலைவராகக் கருதப்படும் சீன பிரதமர் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆஸ்திரேலியா வரும் நிலையிலேயே இத்தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல பீஜிங் பிரதமரின் கன்பரா விஜயம் தொடர்பிலேயே இராஜதந்திர வட்டாரத்தின் பார்வை திரும்பியுள்ளது. ஆஸ்திரேலியர்களின் கவனத்தையும் குறித்த விஜயம் ஈர்த்துள்ளது.

சீன விவகாரத்தில் லேபர் கட்சி சிறந்த கொள்கையை பின்பற்றும் என 2023 இல் பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள் நம்பிய நிலையில், தற்போது அந்த நம்பிக்கை 40 வீதத்தால் குறைந்துள்ளது என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

அத்துடன், 10 ஆஸ்திரேலியர்களில் நால்வர் மட்டுமே சீன உறவுகளை நிர்வகிப்பது தொடர்பான லேபர் அரசின் அணுகுமுறை குறித்து திருப்தி அடைந்துள்ளனர்.

அதேவேளை, சுமார் 70 சதவீத ஆஸ்திரேலியர்கள் சீனாமீது அவநம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் பலர் ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புக்கு சீனா அச்சுறுத்தலாக விளங்கும் என கருதுகின்றனர்.

சீனாவுடன் இராணுவ மோதல் ஏற்படகூட வாய்ப்பு உள்ளது என சிலர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

Related Articles

Back to top button