others

கடவுச்சீட்டுகளை விரைவாக பெற புதிய திட்டம் முன்வைப்பு

கடவுச்சீட்டுகளை விரைவாக பெறுவதற்குரிய புதிய திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜுலை முதலாம் திகதி முதல் இத்திட்டம் ஆஸ்திரேலியாவில் அமுலுக்கு வரவுள்ளது.

இதன்படி கடவுச்சீட்டு விண்ணப்ப கட்டணத்துக்கு மேலதிகமாக 100 டொலர்களை செலுத்தி, ஐந்து வணிக நாட்களுக்குள் கடவுச்சீட்டை பெறலாம்.

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் ஒருவர், அதனை 2 வணிக நாட்களுக்குள் பெறும் நடைமுறை ஏற்கனவே உள்ளது. எனினும், இதற்கான கட்டணமாக 252 டொலர்கள் மேலதிகமாக அறிவிடப்படுகின்றது. இந்நிலையிலேயே ஐந்து நாட்கள் திட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.

16 வயதுக்கு மேற்பட்டோருக்கு 10 வருடங்கள் செல்லுபடியாகும் கடவுச்சீட்டை பெறுவதற்கு தற்போது 346 டொலர்கள் அறிவிடப்படுகின்றன.

இதனை ஐந்து நாட்களுக்குள் பெற விருப்பினால் 446 டொலர்களை செலுத்த வேண்டும். 2 நாட்களில் பெற விரும்பினால் 600 டொலர்களை செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button