others

பசுபிக் பிராந்தியத்தில் சீனாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா புது வியூகம்!

பசுபிக் பிராந்தியத்தில் மிக முக்கிய பாதுகாப்பு பங்காளியாக தன்னை நிலைநிறுத்திக்கொள்வதற்கு ஆஸ்திரேலியா பல நகர்வுகளை முன்னெடுத்துவரும் நிலையில், புதியதொரு திட்டத்தையும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

இதன்படி பசுபிக் பிராந்தியத்திலுள்ள நாடுகளின் பொலிஸாருக்கு பயிற்சி வழங்குவதற்காக பாரியதொரு பயிற்சி மையத்தை உருவாக்க உத்தேசித்துள்ளது. இந்த பயிற்சி மையம் Brisbane அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்குரிய நடவடிக்கைகளை ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

பசுபிக் தீவுகள்மன்ற தலைவர்களின் மாநாடு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளது. இதன்போது ஆஸ்திரேலியாவின் மேற்படி நகர்வுக்குரிய ஒப்புதல் பெறப்படும் என தெரியவருகின்றது.

துப்பாக்கிச்சூடு, தந்திரோபாய நகர்வு உள்ளிட்ட பயிற்சிகளும், அதிநவீன தொழில்நுட்ப பயிற்சிகளும் குறித்த நிலையத்தின் ஊடாக வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விசேட பொலிஸ் குழுவொன்றும் பயிற்றுவிக்கப்படவுள்ளது.

பசுபிக் நாடுகளில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டாலோ அல்லது அவசரநிலை ஏற்பட்டாலோ இந்த குழு தமது சேவையை வழங்கும் எனவும் தெரியவருகின்றது.

பசுபிக் பிராந்தியத்திலுள்ள சில நாடுகளுக்கு சீனா பொலிஸ் பயிற்சியை வழங்கிவரும் நிலையிலேயே, தனது பாதுகாப்பு இருப்பை பசுபிக் பிராந்தியத்தில் நிலைநிறுத்திக்கொள்ள ஆஸ்திரேலியா இந்த நகர்வை கையாண்டுள்ளது என தெரியவருகின்றது.

Related Articles

Back to top button