others

தேசிய போர் நினைவிடத்தை சேதப்படுத்திய பாலஸ்தீன ஆதரவாளருக்கு வலை

ஆஸ்திரேலியாவின் தேசிய போர் நினைவிடத்திலுள்ள சின்னங்களில் வரைந்து, அவற்றை பாலஸ்தீன ஆதரவாளரொருவர் சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை வேட்டையில் இறங்கியுள்ளனர்.

குறித்த செயலில் ஈடுபட்டுள்ள நபர் தேடப்பட்டுவருகின்றார். அவர் தொடர்பான படத்தை பெடரல் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

இன்று அதிகாலை, பாலஸ்தீன ஆதரவு வாசகங்களுடன் நினைவு சின்னத்தின் மூன்று பகுதிகளில் எழுதி, அவற்றை இந்நபர் சேதப்படுத்தியுள்ளார்.

சிசிரிவி காட்சிகளை அடிப்படையாகக்கொண்டு விசாரணை ஆரம்பமாகியுள்ளது.

கறுப்பு உடை அணிந்து, முகத்தை மூடியவாறு வந்துள்ள நபரே இச்செயலில் ஈடுபட்டுள்ளார்.

Related Articles

Back to top button