others

சிட்னியில் ஆணின் சடலம் மீட்பு: பெண் கைது!

சிட்னி வடமேற்கு பகுதியில் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், அச்சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று முற்பகல் 11 மணியளவிலேயே நியூ சவூத் வேல்ஸ் பொலிஸாரால் குறித்த நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 60 வயது மதிக்கதக்க நபரொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண்ணும் 60 வயதுடையவர் என நம்பப்படுகின்றது. அவர் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.

Related Articles

Back to top button