others

மத்திய வங்கி கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவு

ஆஸ்திரேலிய மத்திய வங்கியின் அடுத்த கூட்டம், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல்வாரத்தில் நடைபெறும்வரை ரொக்க வட்டி வீதம் 4.35 வீதமாக தக்கவைக்கப்படும் என்று மத்திய வங்கி ஆளுநர் இன்று தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் நிதிச்சபைக் கூட்டம் நேற்றும், இன்றும் நடைபெற்றது.

இதன்போது ரொக்க வட்டி விகிதத்தை மாற்றாமல் இருப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இத்தகையதொரு தீர்மானமே எடுக்கப்படும் என பொருளாதார நிபுணர்கள் முன்கூட்டியே கணித்திருந்தனர்.

இதற்கிடையில் ஆஸ்திரேலியாவில் மே மாதத்துக்கான வேலையின்மை வீதம் 3.9 வீதத்திலிருந்து 4 வீதமாக அதிகரித்துள்ளது.

அதேவேளை, பணவீக்க விகிதமும் 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சீரான நிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

பணவீக்கம் மேலும் குறைவடைவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று பொருளாளர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Related Articles

Back to top button