others

தீ கட்டுக்குள் வந்தாலும் எச்சரிக்கை நீடிப்பு!

மெல்பேர்ண் மேற்கு பகுதியிலுள்ள இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட பாரிய தீ பரவல் கடும் போராட்டத்துக்கு மத்தியில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தீ விபத்தையடுத்து ஆயிரக்கணக்கான மக்களை வீடுகளுக்குள்ளேயே பாதுகாப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் அவசர அறிவுறுத்தல் விடுத்தனர். அருகில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

தீ பரவி, கரும்புகை மூண்டதால் அப்பகுதிக்கு அருகே செல்லும் நெடுஞ்சாலைகூட மூடப்பட்டிருந்தது.

பல தீயணைப்பு வாகனங்களும், 180 இற்கு மேற்பட்ட தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து, தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கினர்.

தீ கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தாலும் ஆபத்தான நச்சு பொருட்கள் தொடர்ந்து எரிவதால் மக்களுக்கான எச்சரிக்கை தொடர்கின்றது.

Related Articles

Back to top button