others

Alice Springs பகுதியில் ஊரடங்கு நீடிப்பு?

பூர்வக்குடி மக்கள் செறிந்து வாழும் Alice Springs பகுதியில் அமுலில் உள்ள ஊடரங்கு உத்தரவு மேலும் நீடிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பொலிஸ் அமைச்சர் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் மேலும் 7 நாட்களுக்கு ஊடரங்கு சட்டத்தை நீடிக்க முடியும்.

எனினும், ஊரடங்கு உத்தரவை நீடிப்பதா அல்லது இல்லையா என்பது தொடர்பில் நாளை வியாழக்கிழமையே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

வன்முறைச் சம்பவங்களையடுத்து Alice Springs பகுதியில் மூன்று நாட்களுக்கு பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்துவருகின்றது.

இந்நிலையிலேயே அதனை நீடிப்பதா அல்லது இல்லையா என்பது குறித்து நாளை முடிவெடுக்கப்படவுள்ளது.

Related Articles

Back to top button