Astrology

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (01.06.2024)

மேஷம் – மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வருமானத்தை உயர்த்துவதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தேவையில்லாத நண்பர்கள் தானாக உங்களை விட்டு விலகி விடுவார்கள். உங்கள் வாழ்க்கையில் இனி வரக்கூடிய காலம் நல்ல காலம் ஆக அமையும். பிரச்சனைகளை கண்டு துவண்டு போகாதீர்கள். எதிர்த்து நின்றால் எதிரி தூர சென்று ஓடி விடுவான். எதிரியை கண்டு அனாவசிய பயம் தேவையில்லை.

ரிஷபம் – ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த ஏற்றத்தாழ்வுகள் விலகும். மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். சம்பள உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. தொழிலில் இருந்து வந்த சின்ன சின்ன இடர்பாடுகள் நீங்கும். தொழிலை விரிவுபடுத்தலாம். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

மிதுனம் – மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ்ந்தது உயரக்கூடிய நாளாக இருக்கும். எல்லா விஷயத்திலும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் மரியாதை உங்களைத் தேடி வரும். நிதி நிலைமை சீராக இருக்கும். வாங்கிய கடனை எல்லாம் திருப்பிக் கொடுக்கக்கூடிய நேரம் காலம் கைக்கொடி வரும். புதுசாக ஆடை ஆபரண சேர்க்கை இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும்.

கடகம் – கடக ராசிக்காரர்களுக்கு இன்று கையில் இருக்கும் பணம் கரையக்கூடிய நாளாக இருக்கும். செலவுகளை கொஞ்சம் கட்டுப்படுத்த பாருங்கள். தேவை உள்ள செலவு எது, தேவையில்லாத செலவு எது என்பதை சிந்தித்து செயல்படாவிட்டால், இன்று வீண்விரயம் ஏற்பட்டு விடும். மற்றபடி வேலை தொழிலில் எல்லாம் சுமூகமான சூழ்நிலையை நிலவும். வாழ்க்கையை முன்னேற்ற பாதையில் எடுத்துச் செல்ல தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

சிம்மம் – சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சுடக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. புதிய வேலை தேடி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக விற்காத நிலம் வீடு போன்ற சொத்து பத்து பத்துகளை விற்பதற்கு நேரம் காலம் கூடி வரும். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள்.

கன்னி – கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நினைத்தது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். சுப செலவுகள் உண்டாகும். காதல் கைகூடும். வேலை செய்யும் இடத்தில் எதிரி தொல்லையில் இருந்து தப்பிப்பீர்கள். நீண்ட தூர பயணத்தின் போது கவனமாக இருக்கவும். உங்களுடைய உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளவும். மேல் அதிகாரிகளுடன் கொஞ்சம் அனுசரணையாக நடந்து கொள்ளுங்கள். வாக்குவாதம் செய்யாதீர்கள்.

துலாம் – துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மன உறுதி அதிகமாக இருக்கும். எந்த ஒரு வேலையை கையில் எடுத்தாலும் அதை எப்படியாவது முடித்தே ஆக வேண்டும் என்று கடினமாக உழைப்பீர்கள். அதற்கு உண்டான பாராட்டுகளும் உங்களை வந்து சேரும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் புதிய முதலீட்டில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். வங்கி கடன் முயற்சி செய்யுங்கள்.

விருச்சகம் – விருச்சக ராசி காரர்களுக்கு இன்று திறமைகள் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். எதிராளிகளில் முன்பு தலை நிமிர்ந்து வாழக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். காரை தூக்கிவிட்டு ஜம்முனு நடந்து செல்லலாம். வீட்டில் சின்ன சின்ன சண்டைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மனைவியை அனுசரித்து சென்றால் பிரச்சனை இல்லை. பிள்ளைகளுக்கு எது தேவை எது தேவையில்லை என்பதை இன்று பார்த்து பார்த்து செய்வீர்கள்.

தனுசு – தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். நிதிநிலைமை சீராகும். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். சேமிப்பை பெருக்குவீர்கள். குடும்பத்திற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்ச்சி அடைவீர்கள். ஆக மொத்தத்தில் இன்று குடும்பத்தில் எந்த பிரச்சனையும் கிடையாது. ஆனால் வேலை சம்மந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் கவனத்தோடு நடந்து கொள்ள வேண்டும்.

மகரம்- மகர ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்ப்புகள் நிறைந்த நாளாக இருக்கும். சக ஊழியர்களிடம் வாக்குவாதம் ஏற்படும். தேவையற்ற பகை உண்டாகுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். கூடுமானவரை எல்லா பிரச்சனைகளிலிருந்தும் ஒதுங்கி இருப்பது நல்லது. மௌனத்தை மட்டும் பதிலாக வைத்துக் கொள்ளுங்கள். அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் இன்று எடுக்க வேண்டாம்.

கும்பம் – nகும்ப ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நாளாக இருக்கும். பிரச்சனைகள் பெருசாக இருக்காது. கோபமானவர்கள் கூட இன்று சாந்தமாக நடந்து கொள்வீர்கள். அமைதியின் சொரூபமாக இருந்தே எல்லா காரியத்தையும் சாதித்துக் கொள்வீர்கள். தொழிலில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளிநாட்டில் இருப்பவர்கள் சீக்கிரம் தாய்நாடு திரும்புவதற்கு உண்டான வாய்ப்புகள் கிடைக்கும்.

மீனம் – மீன ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்தில் பாசத்தை வெளிக்காட்டுவீர்கள். குழந்தைகளோடும் மனைவியுடனும் அன்பாக பேசுவீர்கள். இன்று மாலை வெளியிடங்களுக்கு சென்று உணவு அருந்த வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரஷர் கொஞ்சம் குறையும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

 

Related Articles

Back to top button