Astrology

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (05.06.2024)

மேஷம் – மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வு நிறைந்த நாளாக இருக்கும். எல்லா விஷயத்திலும் சரியான நேரத்தில் சரியான முறையில் அக்கறை காட்ட முடியாது. இதனால் சின்ன பின்னடைவு ஏற்படும். உடனே கவலைப்படாதீங்க. பிரச்சனைகளை சரி செய்வதற்கு உண்டான வழியை தேடுங்கள். நிச்சயம் கடவுள் உங்களுக்கு துணையாக நிற்பார். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். நீண்ட தூர பயணத்தை தவிர்ப்பது நல்லது.

ரிஷபம் – ரிஷப ராசிக்காரர்களுக்கு தேவையில்லாத சண்டைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பகையை வளர்த்துக் கொள்ளாதீர்கள். யாரேனும் வந்து பிரச்சனை செய்தால் கூட நீங்கள் சுமூகமாக பேசுவது எதிர்காலத்திற்கு நன்மையை செய்யும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். வேலை செய்யும் இடத்தில் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். தொழிலில் சின்ன சின்ன முட்டுக்கட்டைகள் வரும். எல்லாவற்றையும் பொறுமையாக கடந்து செல்வது நன்மை தரும்.

மிதுனம் – மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் கூடுதலாக கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் புதிய முதலீடு செய்யலாம். நண்பர்கள் உறவுகள் எல்லாம் உங்களை அக்கறையோடு கவனித்துக் கொள்வார்கள். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் விலகும். நீண்ட தூர பயணத்தின் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

கடகம் – கடக ராசிக்காரர்களுக்கு இன்று நல்லதே நடக்கும். மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். இதுநாள் வரை எதிரிகளாக சண்டை போட்டுக் கொண்டிருந்தவர்கள் கூட இனிவரும் காலகட்டத்தில் நண்பர்களாக பழகுவார்கள். இன்று மாலை மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். முருகர் வழிபாடு செய்யுங்கள். உங்களுக்கான நல்லது உங்களைத் தேடி வரும்.

சிம்மம் – சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக செய்ய வேண்டும் என்று நினைத்து செய்யாமல் விட்டு வைத்திருந்த காரியத்தை இன்று செய்யலாம். ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த சண்டை சச்சரவுகள் சரியாகும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். சுப செலவுகள் உண்டு. செலவுக்கேற்ற வருமானம் வந்து கொண்டே இருக்கும்.

கன்னி – கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். தொழிலில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீட்டை செய்யலாம். முதலீட்டுக்கு தேவையான தொகையை வங்கியில் இருந்து கடன் வாங்குவோம். அதிக வட்டிக்கு கடன் வாங்காதீங்க. நீண்ட நாட்களாக பிரச்சனை கொடுத்திருந்தவர்கள் கூட இன்று உங்களை நாடி வந்து பேசுவார்கள். மன நிம்மதி அடைவீர்கள்.

துலாம் – துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து தேடி வரக்கூடிய நாளாக இருக்கும். உற்சாகத்தில் உங்களுடைய முகம் இன்று முழுவதும் புன்னகையோடு இருக்கும். வேலை செய்யும் இடத்தில் ப்ரோமோஷன் கிடைக்கும். தொழிலில் எதிரியாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறுவார்கள். கமிஷன் தொழில் நல்லபடியாக நடக்கும். பர்ஸ் நிரம்பி வழியும்.

விருச்சிகம் – விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று குழப்பம் இல்லாத நாளாக இருக்கும். புதிய முடிவுகளை எடுக்கலாம். உங்களுடைய முன்னேற்றத்தை தடுப்பதற்கு சில பேர் இடையூறாக நின்றாலும் அதைப்பற்றி கவலைப்படாதீர்கள். வாழ்க்கை முன்னேற்றத்தை நோக்கி செல்கிறதா அதை மட்டும் கவனியுங்கள். அனாவசியமாக உங்களைப் பற்றி பின்னால் பேசி உங்களை அழிக்க வேண்டும் என்று நினைப்பவர்களை பற்றிய சிந்தனையை தூக்கி வெளியே போடுங்கள். நல்லதே நடக்கும்.

தனுசு – தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் நிறைந்த நாளாக இருக்கும். எல்லா விஷயத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆர்வத்தை வெளிக்காட்டுவீர்கள். இதனால் மேலதிகாரிகளிடம் பாராட்டை பெறுவீர்கள். உங்களுக்கான புது வாய்ப்புகள் உங்கள் வீடு தேடி வரும். நிதி நிலைமை கொஞ்சம் சிக்கலாக தான் இருக்கும். செலவுகள் அதிகரிக்கும்.

மகரம் – மகர ராசிக்காரர்களுக்கு இன்று விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியை கொடுக்கும். கொஞ்சம் சோம்பேறித்தனத்தை ஒதுக்கி வைத்து விடுங்கள். கூடுதல் நேரத்தை போட்டு உழைக்கும் போது தான் இன்று பிரச்சினையிலிருந்து தப்பிக்க முடியும். கொஞ்சம் சோம்பேறித்தனம் பட்டால் இன்றைய நாள் இறுதியில் தலைவலியோடு டென்ஷனோடு வீடு திரும்புவீர்கள். ஜாக்கிரதையாக இருங்கள். காலை முதலில் சுறுசுறுப்பு உங்களுக்கு சொந்தமாகி விட வேண்டும்.

கும்பம் – கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். எதிரிகளை வீழ்த்துவீர்கள். வாக்குவாதத்தில் உங்களை மிஞ்ச ஆளே இருக்காது. திறமை வெளிப்படும். பேசியே சில விஷயத்தை சாதித்து விடுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த சிக்கல்கள் விலகும் குடும்பத்தில் சந்தோஷமி இரட்டிப்பாகும்.

மீனம் – மீன ராசிக்காரர்களுக்கு இன்று சொன்ன வாக்கை நிறைவேற்றக்கூடிய நாளாக இருக்கும். மேலதிகாரிகளிடம் எப்படியாவது பாராட்டை வாங்கி விடுவீர்கள். நிதி நிலைமை சீராகும். பெரிய பாரத்தை விட்டு இறங்கியது போல நிம்மதி அடைவீர்கள். இரவு நல்ல தூக்கத்தை பெறுவீர்கள். குலதெய்வத்திற்கு நன்றி சொல்லுங்கள். முடிந்தால் குலதெய்வ கோவிலுக்கு சென்று குலதெய்வ வழிபாடு செய்வது மேலும் சிறப்பு.

 

Related Articles

Back to top button