லேபர் அரசின் மூத்த அமைச்சர்கள் இருவர் பதவி விலகவுள்ள நிலையில், அமைச்சரவை மறுசீரமைப்பு தொடர்பில் பிரதமர் தீவிர கவனம் செலுத்தியுள்ளார். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறவுள்ள நிலையில், தமக்கான வாய்ப்பு குறித்து ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். Linda Burney வகித்த பூர்வக்குடி அமைச்சு பதவி, இணை அமைச்சர் பூர்வக்குடி செனட்டர் இடம் ஒப்படைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமைச்சரவை மறுசீரமைப்பின்போது உள்துறை அமைச்சர் இடம் இருந்து அந்த அமைச்சு பறிக்கப்படவுள்ளது என தெரியவருகின்றது. அவர் பிரிதொரு துறைக்கு நியமிக்கப்படவுள்ளார். அத்துடன், குடிவரவு அமைச்சர் பதவி மாற்றம் செய்யப்படுவார் என தெரியவருகின்றது. புகலிடக்கோரிக்கையாளர் விவகாரம் தொடர்பில் கடந்த காலங்களில் இவ்விரு அமைச்சர்களும் கடும் விமர்சனங்களுக்கு…
ஆஸ்திரேலியாவில் கடந்த மூன்று தசாப்தங்களில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைச் சம்பவங்கள் கணிசமான அளவு குறைவடைந்துள்ளது. எனினும், வன்முறைச் சம்பவங்களை தடுப்பதற்கு மேலும் பல காத்திரமான நடவடிக்கைகள் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதில் தீவிரமாக செயற்படும் முன்னணி தேசிய அமைப்பான Our Watch வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையின் பிரகாரம் ஆண்களால் பெண்கள் கொலை செய்யப்படும் சம்பவங்கள் 66 சதவீதம்வரை குறைவடைந்துள்ளது. இவ்வருடம் ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கு எதிரான அதிக வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றன. கொலைச் சம்பவங்களும் பதிவாகின. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மேற்படி அமைப்பின் அறிக்கையும் வெளியாகியுள்ளது. குடும்ப வன்முறையால் இவ்வருடம் 42 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், இதனை…
மெல்பேர்ணில் புதிய தொழில் நுட்ப மனநல சிகிச்சை மையம். உலகின் முதல் மனநலத்திற்கான நவீன முறையிலான சிகிச்சை மையம் மெல்பேர்ணில் திறக்கப்படவுள்ளது. கணினியால் உருவாக்கப்பட்ட சூழலை உருவகப்படுத்தி, அதனுடன் மிகவும் யதார்த்தமான முறையில் தொடர்புகொள்வதை சாத்தியமாக்கும் மெய்நிகர் ரியாலிட்டி (Virtual reality technology ) சமீபகாலமாக விளையாட்டு கல்வி, சுகாதாரம் மற்றும் பொழுதுபோக்கு போன்ற துறைகளில் பயன்பாடுகளுடன், சமீபத்திய ஆண்டுகளில் இது மிகவும் பிரபலமாகி வருகிறது. இந்த மெய்நிகர் ரியாலிட்டி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான சோதனைகள், மனநோய் முதல் பதட்டம், உணவுக் கோளாறுகள் மற்றும் பயம் வரையிலான நிலைமைகளை நிவர்த்தி செய்ய பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. 12 முதல் 25 வயதிற்குட்பட்டவர்களுக்காக பார்க்வில்லில் உள்ள Orygen…
கடந்த ஜூலை 13 பென்சில்வேனியாவில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தின்போது ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட நிலையில், பிரபுக்கள் பாதுகாப்புக் குறைபாட்டிற்கு பொறுப்பேற்று அமெரிக்க இரகசிய சேவை இயக்குனர் கிம்பர்லி சீட்டில் பதவி விலகியுள்ளார். டிரம்பிற்கு எதிரான ஒரு படுகொலை முயற்சியைத் தடுக்க ஏஜென்சி தோல்வியடைந்ததை அடுத்து காங்கிரஸின் கமிட்டியின் முன் ஆஜராகி, பாதுகாப்பு தோல்விகளுக்காக ஜனநாயகக் கட்சியினராலும் குடியரசுக் கட்சியினராலும் மணிக்கணக்காக விசாரிக்கப்பட்ட பின்னர் பாதுகாப்பு குறையை ஒப்புக்கொண்ட அவர பதவி விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. “ சமீபத்திய பாதுகாப்புக் குறைபாட்டிற்கு நான் முழுப் பொறுப்பேற்கிறேன் கனத்த இதயத்துடன் உங்கள் இயக்குனர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடினமான முடிவை எடுத்துள்ளேன்.,”…
மேஷம் – மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வு நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் சுறுசுறுப்பு இருக்காது. சின்ன சின்ன பின்னடைவுகள் வரும்போது, சின்ன சின்ன தோல்விகளும் வரலாம். தொழிலில் கூடுதல் கவனம் செலுத்தவும். குடும்பத்தில் இருப்பவர்களோடு அனுசரித்து செல்லுங்கள். முன்கோபத்தை மனைவியிடமும் பிள்ளையிடமும் காட்ட வேண்டாம். இன்றைய தினம் கொஞ்சம் சிரமங்கள் நிறைந்த தினமாகத்தான் இருக்கும். அனுசரித்துக் கொள்ளுங்கள். ரிஷபம் – ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கையில் இருக்கும் இருப்பு குறையும். சேமிப்பை செலவு செய்து விட்டு பின்பு வருத்தப்படுவீர்கள். வேலையிலும் தொழிலிலும் பெருசாக எந்த பிரச்சனையும் இருக்காது. குடும்பத்தில் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வரலாம். பெரியவர்களின் சொல்பேச்சு கேட்காமல் எடுக்க முடிவுகள்…