சிலாபம் ,தும்மலசூரிய, யாகம்வெல பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற மோதலில் இருவர் காயமடைந்தனர் எனப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை மசூதியில் தொழுகையின் போது இந்த மோதல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தொழுகை நடத்த வந்த மௌலவிக்கு பணம் கொடுப்பதற்காக தொழுபவர்களிடம் பணம் வசூலிப்பதில் ஏற்பட்ட தகராறில் பள்ளிவாசலில் இரு குழுக்களிடையே மோதல் வெடித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
பள்ளிவாசலுக்கு அருகில் அமைந்துள்ள முஸ்லிம் பாடசாலை தொடர்பான விடயமும் மோதலுக்கு வழிவகுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோதலில் இருவர் காயமடைந்து குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சிலாபம் பிரிவின் பொறுப்பதிகாரியின் மேற்பார்வையில் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.