அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் ஜனநாயகத்தக்கு விரோதமானது. எனவே, இறுதி நேரத்திலாவது அதனை மீளப்பெறுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம்மீது நாடாளுமன்றத்தில் இன்று (25) இரண்டாவது நாளாக விவாதம் நடைபெற்றுவருகின்றது. இன்று மாலை 7 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
இந்நிலையில் 22-வது திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கறுப்பு நிற ஆடைகளை அணிந்து இன்று சபை அமர்வில் பங்கேற்றுள்ளனர்.
22 ஆவது திருத்தச்சட்டமூலம்மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே, அதனை மீளப்பெறுமாறு சஜித் வலியுறுத்தினார்.