ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைமைப்பதவியில் மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகிய பதவிகளில் சஜித் தொடரலாம் எனவும், எனினும் கூட்டணியின் தலைமைப்பதவியில் மாற்றத்தை கட்டாயம் ஏற்படுத்த வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டார செயற்பட்டுவந்த நிலையில், கூட்டணியின் செயலாளர் பதவியை அவர் கபீர் ஹாசீமிடம் கையளித்துள்ளார்.
இதே வழிமுறையை சஜித் பின்பற்ற வேண்டும் என கூட்டணிக்குள் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.
பொதுத்தேர்தலின் பின்னரே இந்ந மாற்றம் பற்றி ஆராயப்பட்டு முடிவெடுக்கப்பட்டுள்ளது.