இலங்கைக்கு 2026 ஜனவரி 01 முதல் நவம்பர் 08 வரையான காலப்பகுதிக்குள் 19 லட்சத்து 12 ஆயிரத்து 233 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி காலப்பகுதிக்குள் இந்தியாவில் இருந்து 5 லட்சத்து 12 ஆயிரத்து26பேரும், பிரித்தானியாவில் இருந்து ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 670 பேரும் , சீனாவில் இருந்து ஒரு லட்சத்து26 ஆயிரத்து 326 பேரும் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.
ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 754 பேரும் பேரும், ரஷ்யாவில் இருந்து 95 ஆயிரத்து 224 பேரும், பிரான்ஸில் இருந்து 85 ஆயிரத்து 865 பேரும் மேற்படி காலப்பகுதிக்குள் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.
மேலும் ஆஸ்திரேலியாவில் இருந்து 97 ஆயிரத்து 822 பேரும், கனடாவில் இருந்து 37 ஆயிரத்து 295 பேரும் வருகை தந்துள்ளனர்.
இலங்கையின் பொருளாதாரத்துக்கு சுற்றுலாத்துறை பெரும் பங்களிப்பு வழங்கிவருகின்றது.
கடந்த வருடம் 23 லட்சத்து 62 ஆயிரத்து 521 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.