தமிழ் ஈழம் மற்றும் பிரபாகரன் தமிழர்களின் கடவுள் போன்ற கருத்துகளை வெளியிட்ட யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், இராமநாதன் அர்ச்சுனாவிடம், அது தொடர்பில் விளக்கம் கோரப்படவுள்ளது.
அடுத்த நாடாளுமன்ற அமர்வின்போது இது தொடர்பில் அவருடன் சபாநாயகர் கலந்துரையாடுவார் என தெரியவருகின்றது.
'குறித்த நாடாளுமன்ற உறுப்பினரின் அபிலாஷை என்னவென்பது எனக்கு தெரியாது. அது தொடர்பில் அவருடன் எதிர்காலத்தில் பேச்சு நடத்தப்படும். அவரின் (அர்ச்சுனா) முகநூல் மற்றும் யூடியூப் பதிவுகளை நாம் கண்காணித்தோம். அவருடன் வெளிப்படைதன்மையுடன் பேசலாம் என நம்புகின்றேன்." - என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை தனிப்பட்ட நபரின் அபிலாஷையைவிட அந்நபர் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் அபிலாஷை என்னவென்பது எமக்கு தெரியும். மக்கள் அவ்வாறு எதிர்பார்க்கவில்லை. வடக்க, கிழக்கு மற்றும் தெற்கு மக்கள் ஐக்கியமாக வாழவே விரும்புகின்றனர் எனவும் சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.