செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்தும் ஒரு கோடியே 71 லட்சத்து 40 ஆயிரத்து 354 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
கம்பஹா மாவட்டத்திலேயே அதிகூடிய வாக்காளர்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளனர். 18 லட்சத்து 81 ஆயிரத்த 129 பேர் வாக்களிக்கவுள்ளனர்.
வன்னி மாவட்டத்திலேயே குறைந்தளவான வாக்காளர்கள் உள்ளனர். அம்மாவட்டத்திலிருந்து வாக்களிப்பதற்கு 3 லட்சத்து 6 ஆயிரத்து 81 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
யாழ்.மாவட்டத்திலிருந்து 5 லட்சத்து 93 ஆயிரத்து 187 பேர் வாக்காளர்களாக பதிவுசெய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை புலம்பெயர் தொழிலாளர்கள், சிறைக்கைதிகள், வைத்தியசாலைகளில் தங்கி இருந்து சிகிச்சைப்பெறும் நோயாளிகள், ஆள்கடல் மீன்பிடி நடவடிக்கைக்கு சென்றுள்ளவர்கள் உள்ளிட்டவர்களுக்கு வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.