ராஜபக்ச குடும்பத்தின் முக்கிய புள்ளிகள் இருவர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர் என தெரியவருகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகரான பஸில் ராஜபக்ச மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆகியோரே வெளிநாடு சென்றுள்ளனர்.
பஸில் ராஜபக்ச கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று காலை டுபாய் நோக்கி பயணமானார். அங்கிருந்து அமெரிக்கா செல்வதற்கு திட்டமிட்டுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச சில நாட்களுக்கு முன்னரே வெளியேறிவிட்டார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் நிலையில், இவ்வாறு அரசியல் பிரமுகர்கள் வெளியேறியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.