ColomboSri Lanka

4000 தாய்மாருக்கு சட்டவிரோதக் கருத்தடை? வைத்தியர் ஷாபி இன்று விடுதலை

பௌத்த தாய்மார் 4000 பேருக்கு சட்டவிரோதக் கருத்தடை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குருநாகலை போதனா வைத்தியசாலையின் மருத்துவர் மொஹமட் ஷாபி இன்றைய தினம் விடுதலை செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இவருடன் சேர்த்து கைது செய்யப்பட்ட மேலும் 36 பேர் இவ்வாறு விடுதலையாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றைய தினம் இரவு கொழும்பில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றது.

இந்த சந்திப்பில் முஸ்லிம் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மதத் தலைவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது கருத்து வெளியிட்டபோதே ஜனாதிபதி இந்த தகவலை வெளியிட்டதாக கூறப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button