தல்கஸ்மோட்டேயிலுள்ள வீடொன்றிலிருந்து, 15 ஆயிரம் ரூபா பெறுமதியான நாட்டுக்கோழிகளை திருடி மத்திய நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டுள்ள சீனர்களுக்கு விற்பனை செய்து விட்டு தலைமறைவாக இருந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தல்கஸ்மோட்டே வீட்டிலிருந்தவர்கள் கடந்த 19ஆம் திகதி வெளியே சென்றிருந்த போது அங்கிருந்த கோழிகள் திருடப்பட்டுள்ளன.
இது தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட போது திருடன் யார் என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து 20 ஆம் திகதி சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரிடம் விசாரணை மேற்கொண்டபோது திருடிய கோழிகளை மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டத்தில் தொழில் புரியும் சீனர்களுக்கு விற்பனை செய்ததாக தெரிவித்துள்ளார்.
சந்தேகநபரை அத்தனகல்ல நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.