எதிர்க்கட்சிகளின் மிரட்டல் நாடகங்களுக்கு இந்த அரசு அடிபணியாது என்று அமைச்சர் லால் காந்த தெரிவித்தார்.
"போலியான விடயங்களைக் குறிப்பிட்டுக் கொண்டு ஒரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபடுகின்றமையாலும், இன்னொரு தரப்பினர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபடுபட்டமையாலும் புதிய கல்விக்கொள்கை அமுல்படுத்தல் பிற்போடப்படவில்லை.
நடைமுறையில் தோற்றம் பெற்ற சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்காகவே ஆறாம் தரத்துக்கான புதிய பாடத்தொகுதி 2027 ஆம் ஆண்டு வரை பிற்போடப்பட்டுள்ளது." - என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
"நாட்டில் தற்போதைய பிரதான பேசுபொருளாக கல்விச் சீர்த்திருத்தம் காணப்படுகின்றது. எதிர்க்கட்சிகளின் போலியான குற்றச்சாட்டுக்களினால் தவறான நிலைப்பாடு தீவிரமடைந்தது.
எதிர்க்கட்சித் தலைவரும் இனவாதிகளின் நிலைக்குத் தள்ளப்பட்டமை அதிருப்திக்குரியது. புதிய கல்வித் திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுகின்றமையாலும், சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டமையாலும் புதிய கல்விக் கொள்கையை அரசு பிற்போடவில்லை.
ஆறாம் தரத்துக்கான புதிய பாடத்திட்டம் மாத்திரமே 2027 ஆம் ஆண்டு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை தொடர்பில் விரிவான கலந்துரையாடலில் ஈடுபடுவோம்." - என்றார்.