சர்வதேச உடன்படிக்கைக்கமையவே ஈரான் கப்பலுக்கு உதவி!
ஈரான் கப்பல் விபத்துக்குள்ளானமை மற்றும் அதற்கு இலங்கை வழங்கிய உதவி தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், நாடாளுமன்றத்தில் இன்று (04) விளக்கமளித்தார்.
இலங்கைக்குரிய கடல் எல்லைக்கு அப்பால் ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான 'ஐரிஸ் டெனா” என்ற கப்பல் விபத்துக்குள்ளாகி, மூழ்கின்றது என இன்று அதிகாலை 5:08 மணியளவில் கடற்படைக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து உடனடியாகச் செயல்பட்ட இலங்கை கடற்படை மீட்புப் படகுகளை அனுப்பி வைத்தது.
கப்பலில் 180 பேர்வரை இருந்துள்ளனர். விமானப்படை மற்றும் கடற்படையின் கூட்டு நடவடிக்கையின் மூலம், கடும் ஆபத்தில் இருந்த சுமார் 30 பேர் மீட்கப்பட்டனர்.
இவர்களின் உயிரை பாதுகாப்பதற்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர் எனவும் வெளிவிவகார அமைச்சர் கூறினார்.
“ 1979 ஆம் ஆண்டின சர்வதேச கடல்சார் தேடல் மற்றும் மீட்பு உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது.
இந்த உடன்படிக்கையின் பிரகாரம், எமது கடல் எல்லைக்கு அருகாமையில் கப்பலொன்றுக்கு ஆபத்தெனில் நாடு, இனம் மற்றும் எவ்வாறு விபத்துக்குள்ளானது என்பன பற்றி கருத்திக்கொள்ளாது மனித நேயத்தின் அடிப்படையில் உதவ வேண்டும்.
இதற்குரிய உரிய தலையீட்டை இலங்கை மேற்கொண்டுள்ளது.