இலங்கையில் இன்று (21) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
மத்திய கிழக்கு போர்ச்சூழலால் எரிபொருள் விநியோகத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விலை அதிகரிப்பும் ஏற்பட்டுள்ளது.
பல நாடுகளில் எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையிலேயே இலங்கையிலும் எரிபொருள் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஒட்டோ டீசல் லீற்றறொன்றின் 79 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலையாக 382 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், லங்கா சுப்பர் டீசல் 90 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக 443 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 90 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 455 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.
ஒக்டேன் 92 ரக பெட்ரோல், 81 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக 398 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் 60 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 255 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.