ColomboCommunitySri Lanka

ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு: ஒஸ்மான் புஷ்பராஜ் கொழும்பில் கைது!

ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணினார் எனக் கூறப்படும் ஒஸ்மான் புஷ்பராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிஐடியினரும், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரும் இணைந்து கொழும்பில் நேற்று முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பின்போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் அஹமதாபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்களுடன் நெருங்கிய தொடர்புகளை ஜெராட் புஸ்பராஜா ஒஸ்மன் ஜெராட் பேணி வந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.

மேற்படி சம்பவம் தொடர்பில் இலங்கையில் இதுவரை அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர் தடுத்து வைக்கப்பட்டு அவரிடம் பலகோணங்களில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

Related Articles

Back to top button