CommunityMain NewsWorld

ரஷ்ய சொத்துகள் மூலம் கிடைக்கும் வருவாயை உக்ரைனுக்கு வழங்க G7 தலைவர்கள் இணக்கம்

ரஷ்ய சொத்துகளில் இருந்து கிடைக்கும் இலாபத்தைக் கொண்டு உக்ரைனுக்கு 5,000 கோடி டொலர்களை வழங்குவதற்கு ஜி – 7 நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன.
உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் பு7 மாநாடு இத்தாலியில் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.

வளர்ச்சியடைந்த நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், கனடா ஆகிய நாடுகள் ஜி -7 கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கின்றன.

இந்நிலையில், இந்த 7 நாடுகளினதும் தலைவர்கள் பங்கேற்கும் 50 ஆவது மாநாடு இத்தாலியின் அபுலியா மாகாணத்தில் உள்ள பசானோ நகரில் ஆரம்பமாகியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், ஜேர்மன் பிரதமர், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மெக்ரோன், ஜப்பான் பிரதமர், கனடா பிரதமர் ஆகியோரும் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் இந்த மாநாட்டில் காஸா போர், உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துகளில் இருந்து கிடைக்கும் இலாபத்தைக் கொண்டு உக்ரைனுக்கு 5,000 கோடி டொலர்கள் கடனுதவி அளிக்க ஜ – 7 மாநாட்டின் முதல் நாளில் உறுப்பு நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து அதன் நான்கு பிரதேசங்களின் கணிசமான பகுதிகளை கைப்பற்றியுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள், உக்ரைனுக்கு ஆயுத மற்றும் நிதியுதவி அளித்து வருகின்றன.

Related Articles

Back to top button