CommunityWorld

சீனாவுக்கு சிவப்பு எச்சரிக்கையை விடுத்தது நேட்டோ

உக்ரைன்மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவை வலுப்படுத்தும் நடவடிக்கையை நிறுத்தாவிட்டால் அதற்கான விளைவுகளை சீனா எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் நேட்டோவின் தலைவர் ஜென்ஸ் ஸ்டொல்டென்பேர்க்.

உக்ரைன் – ரஷ்ய போர் தொடர்பில் சீனா இரட்டை வேடம் போடுகின்றது எனவும் அவர் சாடியுள்ளார்.

“ ரஷ்யாவுக்கு சீனா ஆதரவளித்து வருவது குறித்து நேட்டோ நாடுகள் ஆராய்ந்து வருகின்றன, தடை விதிப்பது குறித்தும் ஆராயப்பட்டுவருகின்றது.” – எனவும் நேட்டோ தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யா தனது ஏவுகணைகளை உற்பத்தி செய்வதற்கு அவசியமான மைக்ரோ எலக்டிரோனிக்ஸ் தொழில்நுட்பங்களை சீனா வழங்கி வருகின்றது, இதனை பயன்படுத்தி உக்ரைன் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான ஏவுகணைகளை ரஷ்யா தயாரிக்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Back to top button