AfricaCommunityWorld

படகு கவிழ்ந்து 89 அகதிகள் பலி!

வடமேற்கு ஆப்பிரிக்க நாடான மரிற்றேனியாவை அண்மித்துள்ள 4 கிலோமீட்டர் (2.5 மைல்) தொலைவில், அட்லாண்டிக் பெருங்கடலில் 170 அகதிகளை ஏற்றி வந்த படகு விபத்துக்குள்ளானதில் சுமார் 89 பேர் பலியாகியுள்ளனர் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடலில் மூழ்கி உயிரிழந்த அகதிகளின் உடல்கள் மொரிட்டானிய கடலோர காவல்படை அதிகாரிகளால் மீட்கப்பட்டன. சிறார்களும் பலியாகியுள்ளனர்.

இறந்தவர்களின் எண்ணிக்கை 105 ஆக இருக்கும் என்றும், கடற்கரையிலிருந்து மீட்கப்பட்ட உடல்களை உள்ளுர் வாசிகள் புதைத்து வருகின்றனர் எனவும் மீனவர் சங்க தலைவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆயிரக்கணக்கான மேற்கு ஆபிரிக்க புலம்பெயர்ந்தோர் அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் மத்தியதரைக் கடலில் ஆபத்தான கடல் வழிகளில் ஒவ்வொரு ஆண்டும் வேலைகள் மற்றும் வாய்ப்புகளைத் தேடி ஐரோப்பாவை அடைகின்றனர்.

இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் 2024 அறிக்கையின்படி, ஐரோப்பாவுக்கான நீண்ட தூரம் பயணம் காரணமாக அட்லாண்டிக் பெருங்கடலில் கடப்பது நம்பமுடியாத அளவிற்கு ஆபத்தானதாகக் கருதப்படுகிறது,

அட்லாண்டிக் வழித்தடத்தில் 2007 ம் ஆண்டிற்குப் பிறகு ஏற்பட்ட மிகப் பாரிய படகு விபத்து இது என்று அறியப்படுகின்றது.

-சபா.தயாபரன்-

 

Related Articles

Back to top button