AsiaCommunityIndiaWorld

அரியணையேறப்போவது எந்த கட்சி? வாக்கெண்ணும் பணி ஆரம்பம்!

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று கருதப்படும் இந்திய நாட்டின் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 தொடங்கி 7 கட்டங்களாக ஜூன் 1 உடன் முடிவடைந்தது.

1435.23 மில்லியன் கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவின் அடுத்த 5 ஆண்டுகள் நாட்டை ஆளப் போவது யார் என்ற கேள்விக்குறியுடன் அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமானது.

தபால்மூல வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பே மின்னனு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தினால் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக ஏப்ரல் 19, 26 ,மே 7,13,20,25 மற்றும் ஜூன் 1 நாட்களில் தேர்தல் நடைபெற்றது. சராசரியாக இந்த தேர்தலில் 64.98 கோடி வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் இது ஒரு உலகசாதனை என்றும் தேர்தல் ஆணையர் ராஜிவ்குமார் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

தேர்தல் முறைகேடுகளுக்கு பயன்பட இருந்ததாக கருதப்பட்ட சுமார் 10,000 கோடியை பறுமுதல் செய்திருக்கிறோம் என்று அவர்மேலும் தெரிவித்தார்.

இன்று காலை 11மணியளவிலேயே ஆட்சியைக் கைப்பற்றப் போவது யார் என்ற முன்னிலை நிலவரம் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்திய நாட்டில் பெரிய திருவிழாகவே கொண்டாடப்படும் தேர்தலின் முடிவுகள் இந்தியாவின் அரியணையைக் கைப்பற்றப் போவது யார் ..? என்று உலகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.

சபா. தயாபரன்

Related Articles

Back to top button