அமெரிக்காவிலிருந்து சட்ட விரோதமாக கனடாவுக்குள்
கடந்த வாரங்களில் நுழைய முயன்ற வெவ்வேறு சம்பவங்களில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதை உறுதிப்படுத்திய கனேடிய ராயல் பொலிஸார் உதவி ஆணையர் லிசா மோர்லேண்ட், மக்கள் வெவ்வேறு குடியுரிமைகளைச் சேர்ந்தவர்கள் என்றும் கனடாவின் மிகவும் குளிரான குளிர்காலத்தை எதிர்கொள்ளத் தயாராக அவர்கள் இல்லை என்றும் தெரிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடுமையான நடவடிக்கையின்படி எல்லையைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை மேற் கொள்ளும் நடவடிக்கையை இது எடுத்துக்காட்டுகிறது.
தனியுரிமைச் சட்டங்கள் காரணமாக அவர்களின் அடையாளங்கள் வெளியிடப்படவில்லை.
சபா.தயாபரன்