ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்ததைக் கண்டித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை 'முட்டாள்" என விமர்சித்த ரஷ்ய இசைக்கலைஞரும் வானொலி தொகுப்பாளருமான 58 வயதான வாடிம் ஸ்ட்ரோய்கின் தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இவர் உக்ரைன் இராணுவத்தை ஆதரித்ததாக குற்றம் சாட்டப்பட்டு , பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாகக் கூறி 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
நடந்துகொண்டிருக்கும் விசாரணையின் ஒரு பகுதியாக புதன்கிழமை அட்மிரால்டிஸ்கி மாவட்டத்தில் உள்ள அவரது செயின்ட் பீட்டர்ஸ்பர்க் குடியிருப்பில் பொலிஸார் சோதனை நடத்தினர்.
ஃபோண்டங்கா என்ற செய்தி நிறுவனத்தின்படி, ஸ்ட்ரோய்கின் கடைசியாக 10வது மாடியில் உயிருடன் காணப்பட்டார். போர் எதிர்ப்பு வழக்கறிஞரும் புடின் மற்றும் உக்ரைன் போரின் தீவிர விமர்சகருமான ஸ்ட்ரோய்கின், சமூக ஊடகங்களில் புடினையும் கிரெம்ளினையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை விமர்சிப்பவர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பது இது முதல் முறை அல்ல.
முன்னதாக உக்ரைன் போரை வெளிப்படையாக விமர்சித்த ரஷ்ய நடனக் கலைஞர் விளாடிமிர் ஷ்க்லியாரோவ், கடந்த நவம்பரில் மர்மமான முறையில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜன்னல் வழியாக விழுந்து அல்லது மர்மமான முறையில் இறந்த புடினின் சமீபத்திய விமர்சகர்களில் ஸ்ட்ரோய்கின் ஒருவர்.
போரை வெளிப்படையாக விமர்சித்த ரஷ்ய பாலே நடனக் கலைஞர் விளாடிமிர் ஷ்க்லியாரோவ் கடந்த நவம்பரில் ஒரு கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து மர்மமான முறையில் குதித்து இறந்தார்."நான் உக்ரைனில் போருக்கு எதிரானவன்" என்று சமூக ஊடகங்களில் பகிரங்கமாக அறிவித்த பின்னர், நடனக் கலைஞரின் மரணம் நிகழ்ந்தது.
இதே சமயம் புதினை கடுமையாக எதிர்த்த ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் திடீரென மயங்கி விழுந்து சுயநினைவை இழந்தது சிகிச்சை பலனளிக்காததால் மரணமடைந்தாகவும் ரஷ்ய சிறைத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அவருக்கு வயது 47. இவர், "திருடர்களையும் சதிகாரர்களையும் கொண்டதுதான் ஐக்கிய ரஷ்ய கட்சி” என்று 2011-ல் அளித்த வானொலிப் பேட்டியில் அறிவித்தார் நவால்னி. அப்போது முதலே அவருக்கும் புதினுக்கும் பகைமை ஏற்பட்டுவிட்டது.
சபா.தயாபரன்