ஹஜ் புனித யாத்திரைக்கு குழந்தைகளை அழைத்துச்செல்ல சவுதி அரேபிய அரசாங்கம் தடை விதித்துள்ளது.
முஸ்லிம்களின் மிக முக்கிய கடைமைகளில் ஒன்றாகக் கருதப்படுவது ஹஜ் பயணம் மேற்கொள்வதாகவும் தங்களது வாழ்நாளில் ஒரு தடவையாவது ஹஜ் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதால் உலகம் முழுவதுமிருந்து இலட்சக்கணக்கான மக்கள் சவுதி அரேபியாவில் உள்ள மக்காவிற்கு செல்கின்றனர்.
ஒவ்வொரு நாட்டிற்கும் என குறிப்பிட்ட எண்ணிக்கையிலான யாத்திரிகர்களுக்கும் ஆண்டுதோறும் அனுமதி வழங்கப்படுகின்றது.
இருந்தபோதிலும் கடுமையான வெயில், சன நெரிசல் ஆகிய காரணங்களால் மக்காவில் ஹஜ் யத்திரை செல்லும் யாத்திரிகர்களின் இறப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் சவுதி அரேபிய அரசாங்கத்தால் புதிய விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
அதற்கமைய 2025ஆம் ஆண்டு ஹஜ் பயணத்தின்போது, யாத்திரிகர்களுடன் குழந்தைகள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்கும் போது இதுவரை புனித யாத்திரை மேற்கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் சவுதி அரேபிய அரசாங்கம் மேலும் அறிவித்துள்ளது.