தமது நாட்டில் பங்களிப்பு இல்லாமல் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் ஏற்படுத்தும் அமைதி ஒப்பந்தத்தை ஏற்கப்போவதில்லை என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறி வருகிறார்.
இது தொடர்பில் ரஷ்ய ஜனரிபதி புடினுடன் தொலைபேசியில் உரையாற்றியுள்ளார்.
இந்நிலையில் ஜேர்மனியில் நடைபெறும் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டுள்ள உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில்,
' உக்ரைன் சுதந்திரமான நாடு. நாங்கள் இல்லாமல் எடுக்கப்படும் எந்த ஒப்பந்தத்தையும் நாங்கள் ஏற்க மாட்டோம். தான் விரும்பியபடி எதுவும் நடக்காத காரணத்தினால், அனைத்தையும் பேச்சுவார்த்தை மூலம் நடத்துவதற்கு புடின் விரும்புகிறார்." என்று குறிப்பிட்டுள்ளார்.
போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னர், அமெரிக்கா, உக்ரைன் சேர்ந்து ஒரு திட்டத்தை வகுக்க வேண்டும். புடினை டிரம்ப் சந்திப்பதற்கு முன்னர், டிரம்ப்பை சந்திக்க நான் விரும்புகிறேன்." எனவும் உக்ரைன் ஜனாதிபதி கூறியுள்ளார்.