காசாவுக்கு செல்லும் உதவிப் பொருள்கள் விநியோகத்தை இஸ்ரேல் நிறுத்திக் கொண்டது. இதற்கு ஹமாஸ் அமைப்பினர் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.
அதன்பிறகு இரு தரப்பிலும் பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். முதல்கட்டமாக மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் கடந்த சனிக்கிழமை முடிவடைந்தது.
அதற்கு முன்னதாகவே 2-ம் கட்ட போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று ஹமாஸ் அமைப்பினர் அறிவித்தனர்.
இதுகுறித்து இஸ்ரேல் தரப்பில் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. இந்நிலையில், காசா பகுதிக்கு செல்லும் பொருள்கள் மற்றும் விநியோகத்தை இஸ்ரேல் நேற்று நிறுத்திக் கொண்டது.
இதற்கான காரணம் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எதுவும் கூறவில்லை. எனினும், “ போர் நிறுத்தத்தை நீட்டிப்பது குறித்து ஏற்கனவே கூறிய சில விடயங்களை ஹமாஸ் அமைபபினர் ஒப்புக்கொள்ளாவிட்டால் கூடுதல் பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்” என்று எச்சரித்துள்ளார்.
காசாவுக்கு உணவுப் பொருட்கள், விநியோகத்தை நிறுத்தி இஸ்ரேல் மலிவான வகையில் மிரட்டுகின்றது. இது போர் குற்றமாகும் என்று ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.