காசாவில் 2 லட்சம் வீடுகளை நிர்மாணிக்க ஏற்பாடு! அரபுலகம் நடவடிக்கை!!
காசாவிலிருந்து மக்களை வெளியேற்றி அதனை புனர்நிர்மானம் செய்யும் அமெரிக்க ஜனாதிபதியின் திட்டத்துக்கு பதிலாக காசாவில் இரண்டு லட்சம் வீடுகளை நிர்மாணிக்கும் யோசனைக்கு அரபுலக தலைவர்கள் பச்சைக்கொடி காட்டியுள்ளனர்.
எகிப்து தலைநகரில் நடைபெற்ற அராபிய தலைவர்களின் உச்சி மாநாட்டிலேயே இதற்குரிய தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதற்காக 53 பில்லியன் டொலர்கள் முதலிடப்படவுள்ளது.
எதிர்வரும் நாட்களில் இந்த திட்டம் குறித்து மேலதிக தகவல்கள் அறிவிடப்படும்.
காசாவை புனரமைக்கும் திட்டத்தை முன்னெடுப்பதற்காக தொழில்நுட்ப வல்லுனர்களின் தற்காலிக குழுவொன்றும் ஸ்தாபிக்கப்படவுள்ளது.
இந்த குழுவுக்குள் ஹமாஸ் அமைப்பினர் உள்வாங்கப்படமாட்டார்கள், பாலஸ்தீன அதிகார சபையின் கீழ் இந்த நிபுணர்கள் குழு செயற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.